நகைச்சுவை - இப்படி ஒரு சூழ்நிலையிலும் நகைச்சுவை உணர்வு இருக்கலாமே!
வீட்டுக்கு வந்த விருந்தினருக்குப் பிரமாதமாகச் சமையல் செய்து அசத்த நினைத்தாள் மேகா. பாயசத்தில் சர்க்கரைக்கு பதிலாகத் தவறுதலாக உப்பைப் போட்டுவிட்டாள். அதை அறியாமல் பெரியக்கரண்டியில் எடுத்து அனைவருக்கும் ஊற்றினாள். அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை, அப்போது பாயசத்தைக் குடித்த மாமா,
"மேகா... பாயசம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இதோட கொஞ்சம் ரசம் சேர்த்து சாப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும் போலயே!" என்று சிரிக்க, வீடே சிரிப்பலையில் மூழ்கியது.
பகிர்:
எவ்வாறு உணர்கிறீர்கள்?




கருத்துகள் (0)
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து தெரிவிக்கவும்!