டேவிட்
அங்க பாருங்க குட்டி பௌ, பௌ எவ்வளவு அழகா, சூப்பரா இருக்குதுல!
நான் போயிட்டு தூக்கவா? தூக்குறேன். வாங்க வாங்க என் பின்னாடியே வாங்க.
டேய், டேய் லோகேஷ் ஓடாத அப்புறம் குட்டி பப்பி ஓடிட போகுது, என் கூடவே வாங்கன்னு சொல்லிக்கிட்டே மெதுவா பப்பியை தூக்கிட்டான் டேவிட்.
பாவம் ரொம்ப பசியில இருக்குது போல டேவிட்டோட முகத்தை நாக்கால நக்கிவிட்டுருச்சி.
ஏய் என்ன பண்ற நான் ஒன்னும் பிஸ்கெட் இல்லை.
பாவம் பால் வடிகிற மூஞ்சி அதான் நக்கிட்டியோ! உனக்கு பசியா இருக்கு போல இரு வரேன்! சாரி, சாரி வா போலாம். டேய் வாங்கடா போலாம், டீக்கடையில விக்கிற பிஸ்கெட் பாக்கெட் ரெண்டு வாங்கிட்டு வீட்டுக்கு போலாம்கிறான்.
என்னடா சொல்லுற டேவிட்? பப்பியை எங்க விடுறது?
எங்க இருந்து தூக்குனோமோ அங்கேயே விட்டுடலாமா? நீதான தூக்குன அப்போ நீதான் விட்டுட்டு வரனும் நாங்க ரெண்டு பேரும் வரமாட்டோம்கிறான் அசோக். ஏன்டா உங்க ரெண்டு பேர் கூடவும் வந்தேன்னு இருக்கு. சுயநலவாதிகள், இப்படிலாம் இருக்காதிங்க. போங்கடா, போங்க குட்டி பப்பியை என்ன பண்ணனும்னு எனக்கு நல்லா தெரியும் கிளம்புங்கடா.
நான் கிளம்பறேன்னு டேவிட் பௌபௌவை கொஞ்சிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டான்.
டீக்கடையில் பிஸ்கெட் பாக்கெட் ரெண்டு வாங்கிட்டு ரோட்டோரமா வேப்ப மரத்துக்கு கீழ உக்கார்ந்து ஒவ்வொரு பிஸ்கெட்டா எடுத்து ஊட்டிவிட்டுட்டு இருந்தான்.
பக்கத்துலயே ஒரு வயசான அம்மா வீடு இருந்தது. டேவிட்டையும் குட்டி பப்பியையும் பார்த்துட்டு ஒரு பாத்திரத்தில திண்படத்தை எடுத்துக்கிட்டு வேகமா ஓடியே வர்றாங்க.
செல்லம், கண்ணு இந்தா கண்ணு சாப்பிடு, அடடா இந்த வயசுலயே எவ்வளவு அருமையா நாய்குட்டிக்கு சாப்பிட பிஸ்கெட் ஊட்டிவிட்டுட்டு இருக்க, நல்ல பொறுப்புதான். நாய்குட்டியை என்கிட்ட காமி நான் தாக்கி வச்சிருக்கேன், இதை சாப்பிடுன்னு முறுக்கை தராங்க.
வேண்டாம் பாட்டி நீங்க சாப்பிடுங்க பரவாயில்லை நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லுறான். இல்லடா செல்லம் நீ சாப்பிடு நல்லா இருக்கும் உனக்காக தான் பாட்டி கொண்டு வந்தேன், இரு குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வர்றேன்னு உள்ள போனவங்க ஜிலுஜிலுன்னு மண்பானையில் இருந்து குளிர்ச்சியான தண்ணீரை தறாங்க.
டேவிட் தான் முதல்ல அந்த தண்ணீரைக் குடிக்காம குட்டி பப்பிக்கு தர்றான். அப்போ திடீர்னு குட்டியா இருந்த பப்பியோட உருவம் சற்று வளர்ந்துருச்சி, மனிதர்கள் போல பேச ஆரம்பிச்சிருச்சி.
டேவீட்டுக்கு பயங்கர ஷாக்கிங்கா ஆகிடுச்சி, நம்பவே முடியல, சந்தோஷமா இருக்கு. பெரிய உருவமான குட்டி பப்பி மனித உருவமாவே மாறிடுச்சி, பாட்டியோட கணவனான தாத்தாவோட உருவமா மாறிடுச்சி.
பாட்டியும், தாத்தாவும் டேவிட்டை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்யுறாங்க.
தெருவில இருந்த நாயாக இருந்தாலும் எவ்வளவு மதிப்பா, தனியா அக்கறையா கவனிச்சிக்கிற குணம் இவ்வளவு சின்ன வயசிலயே இருக்கே! நீ ரொம்ப நல்லா வருவப்பா தம்பி! உன்னுடைய உண்மையான இந்த குணத்தை தெரிஞ்சிக்கதான் நானும் என்னோடைய மந்திரவாதி கணவரும் இப்படியொரு செயல்ல ஈடுபட்டோம்னு பாட்டி சொல்லுறாங்க.
ரோட்டில எவ்வளவோ பேரு எனக்கென்னன்னு பார்த்தும் பார்க்காத மாதிரி போனாங்க, ஆனா நீ அப்படி இல்ல டேவிட். நீ அருமையான சிறுவன் அதனால உன்னோட செயலுக்காக ஒரு தங்க நாணயத்தை எடுத்து இத பரிசா வச்சுக்கோன்னு தந்து டேவிட்டை அனுப்பி வைக்கிறாங்க.
உண்மையான அன்பிற்கு இப்படியும் அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.
பகிர்:
எவ்வாறு உணர்கிறீர்கள்?




கருத்துகள் (0)
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து தெரிவிக்கவும்!